230 திருக்குறள்களை 3 நிமிடம் 25 விநாடிகளில் ஒப்புவித்து உலக சாதனை படைத்த மாணவி.!

நாகர்கோவிலில் யூதிஷா என்ற மாணவி 230 திருக்குறள்களை 3 நிமிடம் 25 விநாடிகளில் ஒப்புவித்து உலக சாதனை படைத்துள்ளார்.

நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலகசாதனைக்காக நிர்ணயிக்கப்பட்ட 5 நிமிடங்களில் அதிவேகமாக திருக்குறள்களை ஒப்புவிக்கும் போட்டி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே, தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் முன்னிலையில் நடைபெற்ற இந்த போட்டியில் யூதிஷா என்ற மாணவி 230 திருக்குறள்களை 3 நிமிடம் 25 விநாடிகளில் ஒப்புவித்து உலக சாதனை படைத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சொத்தவிளை அரசு மேல்நிலைப் பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வரும் யூதிஷா (13) என்ற மாணவி திருக்குறள்களை வேகமாக ஒப்புவிக்கும் திறமையை பெற்றவர். இவர் உலகசாதனைக்கான போட்டியில் பங்கெடுத்து 250 திருக்குறள்களை 3 நிமிடம் 25 விநாடிகளில் கூறி உலக சாதனை படைத்தார். தற்போது அந்த மாணவிக்கு ஆட்சியர் உள்ளிட்ட பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.