உலகம் அழியப்போகல! அழிச்சுகிட்டு இருக்கோம்! ஹர்பஜன் சிங் காட்டம்!

தனது ட்வீட்டர் பக்கத்தில், காட்டமான கருத்தை தெரிவித்த பிரபல கிரிக்கெட்

By leena | Published: Jul 03, 2020 09:02 AM

தனது ட்வீட்டர் பக்கத்தில், காட்டமான கருத்தை தெரிவித்த பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்.

அறந்தாங்கியைச் சேர்ந்த காணாமல் போன  7 வயது சிறுமியின் உடல் வறண்ட குளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் உடல் ரத்த காயங்களுடன் கிடந்தது. இதைத்தொடர்ந்து, விசாரணையில் சிறுமிபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்தது தெரிய வந்தது.

குழந்தைக்கு நடந்த இந்த கொடூர சம்பவம் குறித்து பிரபலங்கள் பலரும் கண்டன குரல் எழுப்பி வருகிற நிலையில், பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் தனது ட்வீட்டர் பக்கத்தில், 'செதஞ்ச அந்த பச்சப்புள்ள ஒடம்ப பாத்தாலே பதறுதே. பெத்தவங்க எப்புடி துடிச்சிருப்பாங்க? எப்புடிடா இப்படிலாம் பண்ணுறீங்க! உலகம் அழியப்போகல..அழிச்சுக்கிட்டு இருக்கோம்.நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும் அப்புடின்னு சும்மா சொல்லிட்டுப் போகல.ரொம்ப கஷ்டமா இருக்குயா.' என பதிவிட்டுள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc