“ராஜபக்சேவை காப்பாற்றுவதற்கே வெளிநடப்பு… இதுதான் பாஜக..” – திருமாவளவன்

“ராஜபக்சேவை காப்பாற்றுவதற்கே வெளிநடப்பு… இதுதான் பாஜக..” – திருமாவளவன்

இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் இந்தியா வெளிநடப்பு செய்திருந்தது தமிழர்களுக்கு செய்த துரோகம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு செய்யூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அக்கட்சி தலைவர் திருமாவளவன், முள்ளிவாய்க்கால் ஈழ இனப்படுகொலைக்கு காரணமான ராஜபக்சேவை சர்வதேச குற்ற புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்தப்படும் வகையில் சர்வதேச குற்றவாளி கூண்டில் நிறுத்துவதற்கு ஆதரவான தீர்மானத்திற்கு இந்தியா வாக்களித்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த கும்பல் ராஜபக்சேவை காப்பற்றுவதற்காக, இலங்கை அரசுக்கு ஆதரவாக, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் கொண்டுவந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்காமல், இந்தியா புறக்கணிப்பு செய்திருக்கிறது. இதுதான் பாஜக தெரிந்துகொள்ளுங்கள் என்று கூறி, இந்தியாவின் வெளிநடப்பு தமிழர்களுக்கு செய்த துரோகம் என்றும் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நேற்று இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் நிறைவேறியது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை 22 நாடுகள் ஆதரித்தும், 11 நாடுகள் எதிர்த்தும் வாக்களித்திருந்தது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா, நேபாளம், ஜப்பான், இந்தோனோஷியா உள்ளிட்ட 14 நாடுகள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube