வேலூரில் 7 மணி முதல் வாக்கு பதிவு தொடங்கியது மக்கள் ஆர்வம்

வேலூரில் 7 மணி முதல் வாக்கு பதிவு தொடங்கியது மக்கள் ஆர்வம்

தமிழகத்தில் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது இதில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் தொகுதியை  தவிர 39 தொகுதிகளுக்கு நடத்தப்பட்டது .இந்த 39 தொகுதிகளில் திமுக 38 அதிமுக தேனி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது .இதில் ஒபிஎஸ் மகன் ரவிந்திரநாத் தேர்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் மீண்டும் அதற்கான தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம் .அதன் பின்னர் வேலூரில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியது .திமுக சார்பாக கதிர் ஆனந்த் அதிமுக சார்பாக ஏசி.சண்முகம் ,நாம் தமிழர் கட்சி சார்பாக தீபலட்சுமி உட்பட 28 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

இதன்படி காலை 7 மனை முதல் மாலை 6 மணி வரை வாக்கு ப பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது .மக்களும்  7 மணி முதல் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர் .

 

 

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube