ஹவாய் தீவில் எரிமலையின் தீக்குழம்புகள் கால்வாயைப் போல ஓடியது..!

அமெரிக்காவின் ஹவாய் தீவில் வெடித்துச் சிதறும் எரிமலையின் தீக்குழம்புகள் மிகப்பெரிய கால்வாயைப் போல பயணித்து வரும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

அங்குள்ள கிலாயூ ( Kilauea) என்ற சக்திவாய்ந்த எரிமலை, 2 வாரங்களுக்கு முன் வெடித்தது. தொடர்ந்து லாவா எனப்படும் தீக்குழம்புகளை வெளியேற்றி வருகிறது.

காடுகளைக் கடந்து பயணிக்கும் தீப்பிழம்புகள், குடியிருப்புகளை நோக்கி வந்ததால், இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டனர்.

நிலைமை மோசமாகி வரும் நிலையில், மிகப்பெரிய கால்வாய் போல எரிமலையின் தீக்குழம்புகள் குடியிருப்புகளைக் கடந்து செல்லும் காட்சிகளும் வெளியாகியுள்ளன

author avatar
Dinasuvadu desk

Leave a Comment