குரங்கை தூக்கிலிட்ட கிராமவாசிகள்! துடிதுடித்து இறந்த குரங்கு! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

குரங்கை தூக்கிலிட்ட கிராமவாசிகள். இந்தியாவில் நாளுக்கு நாள் விலங்குகள் மீதான

By leena | Published: Jul 01, 2020 08:00 AM

குரங்கை தூக்கிலிட்ட கிராமவாசிகள். இந்தியாவில் நாளுக்கு நாள் விலங்குகள் மீதான தாக்குதல் அதிகரித்த வண்ணம் உள்ளது. விலங்குகள் இரக்கமற்ற முறையில் கொல்லப்படுகின்ற்னர். இந்நிலையில்,  தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தின் கிராமப்பகுதிகளில் உள்ள தேக்குமரத் தோட்டத்துக்குள் சில குரங்குகள் கூட்டமாக சென்றுள்ளன. அப்போது கிராமவாசிகள் மூன்று பேர், அந்த குரங்குகளை  தோட்டத்தில் இருந்து குரங்கை விரட்டியுள்ளனர். அனைத்து குரங்குகளும் பயத்தில் ஓடின. ஆனால், ஒரு குரங்கு மட்டும் தவறி விழுந்து மயங்கியுள்ளது. மயங்கிய குரங்கை பிடித்த தோட்டக்காரர்கள் மூன்று பேர், மற்ற குரங்குகளை பயமுறுத்துவதற்காக அந்த குரங்கை கிராம மக்கள் முன்னிலையில் மரத்தில் தூக்கிலிட்டுள்ளனர். பின் அந்த குரங்கை நாய்களுக்கு உணவாக அளித்துள்ளனர். இதனை அவர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ள நிலையில், அம்மபாலம் கிராமத்தை சேர்ந்த 3 பேரையும் கைது செய்த வனத்துறையினர், அவர்கள் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் 9 வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Step2: Place in ads Display sections

unicc