பிரதமர் மோடி வந்தால் தான் தடுப்பூசி போடுவேன் என பிடிவாதம் பிடித்த கிராமவாசி…!

பிரதமர் மோடி வந்தால் தான் தடுப்பூசி போடுவேன் என பிடிவாதம் பிடித்த கிராமவாசி.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். அந்த வகையில் இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலம்,  தார் மாவட்டத்தில் கிக்காவாஸ்  பழங்குடியின கிராமத்திற்கு சுகாதார அதிகாரிகள் அம்மக்களுக்கு தடுப்பூசி செல்லுவதற்காக நேற்று சென்றனர். இதனையடுத்து அங்குள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், ஒருவர் மட்டும் மறுப்பு தெரிவித்து, பிரதமர் மோடியை அழையுங்கள், அவர் இங்கு வந்தால் தான் தடுப்பூசி போட்டுக்  கொள்ளவேன் என கூறியுள்ளார்.

அந்த நபரிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் எவ்வளவோ பேசியும், அவர் தடுப்பூசி போட மறுத்த நிலையில், அதிகாரிகள் ஏமாற்றத்துடன் சென்றனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், மீண்டும் அந்த நபரிடம் பேசி, அவரை தடுப்பூசி போட சம்மதிக்க வைப்போம் என தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.