முள்ளங்கியின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்!

முள்ளங்கி நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்துவதற்கு மிகவும் நல்ல ஒரு காய்கறி

By Rebekal | Published: Jan 31, 2020 05:39 PM

முள்ளங்கி நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்துவதற்கு மிகவும் நல்ல ஒரு காய்கறி ஆகும். இதில் வைட்டமின் சி, இ, பி6, ஃபோலேட்டுகள் ஆகியவை அதிகளவில் காணப்படுகிறது. மேலும் இதில், விட்டமின் ஏ, கே, பி2, பி5, கால்சியம், காப்பர், இரும்புச் சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம், பொட்டாசியம் ஆகியவையும் உள்ளன. இந்த காய்கறியை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் நமது உள்ளுறுப்புகள் மற்றும் உடல் நிலையில் ஏற்படும் குறைபாடுகளை தீர்க்க பயன்படுகிறது. அவை என்னவெல்லாம் என்பதை பாப்போம்.

பயன்கள்:

இரத்தத்தில் பிலிரூபினின் அளவினை கட்டுப்படுத்துகிறது. மஞ்சள் காமாலையினால் பாதிக்கப்பட்ட கல்லீரல் மற்றும் பித்தப்பையினை இக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சரி செய்து கல்லீரல் மற்றும் பித்தப்பையில் உள்ள செல்கள் நன்கு செயல்பட ஊக்குவிக்கின்றன. முள்ளங்கியானது சிறுநீரை நன்கு பெருகச் செய்கிறது. இக்காயில் நார்சத்து மற்றும் அதிகளவு நீர்ச்சத்தும் உள்ளது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு இக்காய் சிறந்த தேர்வாகும்செரிமான உறுப்புகளில் உள்ள நச்சுப் பொருட்களை இக்காய் நீக்குவதால் மூலநோய், வாயு தொந்தரவு, மலச்சிக்கல் ஆகியவற்றிற்கு இது சிறந்த தீர்வாக உள்ளது.
Step2: Place in ads Display sections

unicc