வெளிநாட்டு ஹேக்கர்கள் பற்றிய தகவல்களுக்கு 10 மில்லியன் டாலர் – அமெரிக்கா அறிவிப்பு..!

வெளிநாட்டு ஹேக்கர்கள் பற்றிய தகவல்களுக்கு அமெரிக்கா 10 மில்லியன் டாலர் வழங்குவதாக அறிவித்துள்ளது.

அமெரிக்க அரசாங்கத்தின் முக்கியமான உள்கட்டமைப்புக்கு எதிரான தீங்கிழைக்கும் இணைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்க கணினி மோசடி மற்றும் சட்டத்தை மீறும் ஹேக்கர்கள் பற்றிய தகவல்களுக்கு 10 மில்லியன் டாலர் வழங்குவதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.ஏனெனில்,அரசாங்கத்தின் முக்கியமான உள்கட்டமைப்பை குறிவைத்து ரான்சொம்வேர் (ransomware) தாக்குதல்களில் ஹேக்கர்கள் ஈடுபடுகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வெகுமதி சலுகையைப் பற்றிய கூடுதல் தகவல்களை https://rewardsforjustice.net/english/ என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

ஏறக்குறைய 40 ஆண்டுகளாக  உலகெங்கிலும் உள்ள 100 க்கும் மேற்பட்ட மக்களுக்கு 200 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை அதன் வெகுமதிகளுக்கான நீதித் திட்டத்தின் மூலம் செலுத்தியுள்ளதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

ரான்சம்வேர் குழுக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் பைப்லைன்கள், உற்பத்தியாளர்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் உள்ளூர் அரசாங்க கணினிகளை ஹேக் செய்து மில்லியன் கணக்கில் பணம் ஈட்டியுள்ளனர்.இதனால்,கடந்த 2020 ஆம் ஆண்டில் சைபர் தாக்குதல்களுக்கு சுமார் 350 மில்லியன் டாலர் மீட்கும் தொகை வழங்கப்பட்டதாக டி.எச்.எஸ் மதிப்பிட்டுள்ளது.

மேலும்,ரான்சொம்வேர் வைரஸை தவிர,அரசாங்க கணினிகள் ,மாநிலங்களுக்கிடையேயான அல்லது வெளிநாட்டு வர்த்தகம் அல்லது தகவல்தொடர்புகளில் பல இணைய மீறல்கள் நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல சந்தர்ப்பங்களில்,இந்த தாக்குதல்களை நடத்தும் சைபர் குற்றவாளிகள் ரஷ்யாவிற்கு வெளியே செயல்படுவதால், யு.எஸ். ஜனாதிபதி ஜோ பைடென் தனது ரஷ்ய பிரதிநிதி விளாடிமிர் புடினுடன், சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நடப்பு மாத தொடக்கத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.