குற்றவியல் நடைமுறை அடையாளச் சட்டவரைவை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் – சீமான்!

குற்றவியல் நடைமுறை அடையாளச் சட்டவரைவை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் – சீமான்!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குற்றவியல் நடைமுறை அடையாள சட்ட வரைவு 2022 க்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நாட்டு மக்களை நவீன குற்றப்பரம்பரையினராக அடையாளப்படுத்த முயற்சிக்கும் குற்றவியல் நடைமுறை சட்ட வரைவை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்திய குடிமக்களின் அனுமதி இன்றி உயிரியல் தகவல்களை சேகரித்து வைப்பது எந்த வகையில் நியாயமாகும்? இவ்வாறு தரவுகள் பெறப்படுவதன் அடிப்படை நோக்கம் தொடர் குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகளின் குடும்பத்தினர், உறவினர், சமூகத்தினர் மற்றும் பகுதியினர் மட்டுமின்றி அவர் சார்ந்த இனத்தையே குற்றவாளிகளாக சந்தேகித்து கண்காணிக்கவும் அவர்களை நவீன குற்றமாக வகைப்படுத்தவும் முடியும் என்பதால் தான் எனவும் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube