தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மத்திய அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் கூறுகையில்,எந்த கட்சியாக இருந்தாலும் அதற்கு ஒற்றை தலைமை இருப்பதுதான் சிறந்தது.அதிமுகவில் நிலவும் பிரச்னையால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மத்திய அமைச்சர் பதவி கிடைக்கவில்லை .ஸ்டாலினுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் அதிமுக ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் இல்லை என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.