தமிழகத்தில் முதல் முறையாக தங்களது திருமணத்தை பதிவு செய்த திருநங்கை தம்பதியினர்!

தூத்துக்குடி மாவட்டதை சேர்ந்த அருண்குமாருக்கும், அதே மாவட்டதை சேர்ந்த திருநங்கை ஸ்ரீஜா-வுக்கும் கடந்த ஏப்ரல் 31-ம் தேதி ஸ்ரீ சங்கராமேஸ்வரர் திருக்கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது.

இவர்களது திருமணம் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் நடந்து முடிந்த நிலையில், கோவில் நிர்வாகத்தினர் இந்த திருமணத்திற்கான சான்றிதழ் மற்றும் ரசீதுகளை வழங்கவில்லை. இதனால் அவர்களது திருமணத்தை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனையடுத்து, அருண்குமார் – ஸ்ரீஜா இருவரும், தமிழ்நாடு திருமண பதிவு சட்டத்தின் கீழ், தங்களது திருமணத்தை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதனையடுத்து, தூத்துக்குடி பத்திர பதிவு அலுவலகத்தில் வைத்து இவர்கள் இருவருக்கும் பதிவு திருமணம் நடந்தது. தமிழகத்தில் திருநங்கை ஒருவரின் திருமணம் சட்டப்படி பதிவு செய்யப்பட்டிருப்பது, இதுவே முதல் முறையாகும்.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment