ஹைதராபாத்தில் நடந்த சோகம்.! மருத்துவர் அலட்சியத்தால் 10 வயது சிறுமி உயிரிழப்பு.!

  • தனியார் மருத்துவமனையில் சிறுமி ஒருவர், டாக்டர்களின் அலட்சியம் காரணமாக உயிரிழந்துவிட்டதாக கூறி உறவினர்கள் போராட்டம்.
  • அளவுக்கும் அதிகமான மருந்துகள் சேர்க்கப்பட்டு ஊசிகள் போடப்பட்டதே இதற்கு காரணம் என குற்றம்சாட்டினர்.

ஹைதராபாத்தின் குஷாய்குடா காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட ஏ.எஸ்.ராவ் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில், 10 வயது சிறுமியான ரம்யா ஸ்ரீ என்பவர் கடும் வயிற்று வலி காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அந்த சிறுமி சிகிச்சையில் இருந்த போது உயிரிழந்தார்.  இதனிடையே சிறுமியின் திடீர் உயிரிழப்பிற்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் மருத்துவர்கள் அளவுக்கும் அதிகமான மருந்துகள் சேர்க்கப்பட்டு ஊசிகள் போடப்பட்டதே இதற்கு காரணம் என குற்றம்சாட்டினர்.

எனவே, மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழப்பு நடந்திருக்கிறது என மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்கள் மருத்துவமனை முன் போராட்டம் நடத்தினர். இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தது வந்தனர். பின்னர் அவர்களிடம் பேச்சு நடத்தி சமாதானப்படுத்தினர். மேலும் அவர்களின் கோரிக்கையை ஏற்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்