Sridevi

Sridevi : நடிகை ஸ்ரீதேவியை காதலித்து வீட்டில் பொண்ணு கேட்ட டாப் நடிகர்? பின் நடந்தது என்ன தெரியுமா?

By

தமிழ் சினிமா முதல் ஹிந்தி சினிமா வரை ஒரு காலத்தில் கோடி கட்டி பறந்தவர் என்றால் நடிகை ஸ்ரீதேவி என்றே கூறலாம். இவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் கூட அவர் நடித்த படங்கள் என்றுமே மக்களின் மனதில் இருக்கும் அதைப்போல அவரும் மக்கள் மனதில் இருப்பார் என்றே கூறலாம். இவர் முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டிருந்த காலத்திலே 1996-ல் தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்துகொண்டார்.

இருந்தாலும் ஸ்ரீதேவி முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டிருந்த காலத்தில் அவரை பல பெரிய நடிகர்கள் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்ரீதேவியை நேசித்ததாகவும், அவருடைய வீட்டிற்கே சென்று அவருடைய அம்மாவிடம் பொண்ணுக்கேட்டதாகவும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் ” ரஜினிகாந்த் அழகாக இருப்பதால் அவருக்கு அழகான நடிகைகளை பார்த்தால் விருப்பம் அதிகம். ஆரம்ப காலகட்டத்தில் ரஜினி ஸ்ரீதேவியை மிகவும் நேசித்தார். ஏனென்றால், ரஜினி தாய் அன்புக்கு ஏங்கியவர். இளம் வயதிலே அவர் தன்னுடைய தாயை இழந்துவிட்டார்.

எனவே, அந்த மாதிரி ஒரு சூழ்நிலையில், இயல்பாகவே ரஜினிகாந்த் தாய் அன்புக்கு ஏங்கியதன் காரணமாகத்தான் ஸ்ரீதேவியை காதலித்தார். பிறகு அவருடைய வீட்டிற்கே சென்று ஸ்ரீதேவியின் அம்மாவிடம் நான் ஸ்ரீதேவியை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். அவரை எனக்கு கல்யாணம் பண்ணி கொடுங்க நான் வாழ்க்கையில் செட்டில் ஆகவேண்டும் என்று பொண்ணு கேட்டார்.

அதற்கு ஸ்ரீதேவியின் அம்மா கோபம் படாமல் நீங்கள் நல்ல சம்பளம் வாங்குறீங்க நல்ல இருக்கீங்க அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், ஸ்ரீதேவி நடித்து சினிமாவில் சாதிக்க போகிறார். அவர் சாதிக்கவேண்டிய பல விஷயங்கள் இருக்கிறது. அதனால் இப்போது அவருக்கு திருமணம் செய்து கொடுக்க எனக்கு விருப்பம் இல்லை என அவருடைய தாயார் கூறிவிட்டார்” எனவும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும், நடிகை ஸ்ரீதேவி சால்பாஸ், ௧௬ வயதினிலே, அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, நான் அடிமை இல்லை, அடுத்த வாரிசு, தனிக்காட்டு ராஜா, போக்கிரி ராஜா, பிரியா, காயத்ரி உள்ளிட்ட பல படங்களில் ரஜினியுடன் ஆரம்ப காலகட்டத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dinasuvadu Media @2023