கொரோனா எதிரொலி;தமிழகம் முழுவதும் நாளை இதற்கு தடை – தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

TN Govt
TN Govt

கொரோனா பரவல் காரணமாக நாளை (ஜன.26ம் தேதி) கிராம சபை கூட்டம் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்நிலையில்,அதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாக நாளை (ஜன.26ம் தேதி) கிராம பஞ்சாயத்துகளில் எந்த ஒரு கிராம சபை கூட்டத்தையும் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

“மாநிலத்தில் நிலவும் கொரோனா சூழ்நிலை மற்றும் பொது மக்களின் நலன் கருதி, 2022 ஜனவரி 26 அன்று கிராம சபையை நடத்த வேண்டாம் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.எனவே, 26.01.2022 அன்று கிராம பஞ்சாயத்துகளில் எந்த ஒரு கிராம சபையையும் கூட்டக்கூடாது என்று தேவையான உத்தரவுகளை கிராம பஞ்சாயத்துகளுக்கு வழங்க மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.