வெளியாகியது சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படத்தின் மூன்றாவது பாடல்…!

சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் பாண்டிராஜ் அவர்களின் இயக்கத்தில் தற்போது சூர்யா நடித்துள்ள புதிய திரைப்படம் தான் எதற்கும் துணிந்தவன். இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் அவர்கள் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் சத்யராஜ், ராதிகா, சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் நிறைவடைந்து இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே படத்திலிருந்து வாடா தம்பி, உள்ளம் உருகுதையா ஆகிய இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தற்போதும் இந்த படத்திலிருந்து சும்மா சுர்ருன்னு எனும் மூன்றாவது பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலுக்கு டி.இமான் அவர்கள் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயன் அவர்களது வரியில் அர்மான் மாலிக் மற்றும் நிகிதா ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர்.