மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதி கைது..!

மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதி கைது..!

மும்பையில் கடந்த 1993–ம் ஆண்டு மார்ச் 12–ந் தேதி நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 257 அப்பாவி பொதுமக்கள் பலியானார்கள். 713 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு வழக்கில் 100 பேருக்கு 6 மாதம் முதல் ஆயுள் தண்டனை வரை கடந்த 2007 ஆம் ஆண்டு பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் வழங்கியது.
இதன் முக்கிய குற்றவாளியான யாகூப் மேமன் கடந்த 2015 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார். இதில் தாதா தாவூத் இப்ராகிம், அனிஸ் இப்ராஹிம்,டைகர் மேமன் உள்ளிட்ட 27 பேர் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர்கள் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பின் குற்றவாளியான அகமத் முகமது லாம்புவை குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
முன்னதாக கைது செய்யப்பட்ட அகமத் லாம்புக்கு எதிராக சிபிஐ மற்றும் இன்டர்போல் அதிகாரிகள் ரெட் கார்னர் அறிவிப்பு மற்றும் வாரண்டுகள் வழங்கப்பட்டதை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட அகமத், சட்டவிரோதமாக ஆயுதங்கள் விற்றது தற்போது தெரியவந்துள்ளது.
author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *