தமிழக அரசு உடனடியாக இது தொடர்பாக ஆணை பிறப்பிக்க வேண்டும்! – மநீம

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவராக அனுமதி வழங்க வேண்டும் என மநீம வலியுறுத்தல். 

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவராக அனுமதிக்க தமிழக அரசு உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள  அறிக்கையில்,’ வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று, பயிற்சி மருத்துவராகும் வாய்ப்புக்காக காத்திருக்கும் மாணவர்கள் பரிதவிக்கும் சூழல் நிலவுகிறது. எனவே, இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு, வெளிநாடுகளில் பயின்ற மருத்துவ மாணவர்கள், அரசு மருத்துவக் கல்லூரிகளில் உடனடியாக உள்ளிருப்புப் பயிற்சி மருத்துவராகப் பணிபுரியும் வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும்.

குறிப்பாக, ரூ.2லட்சம் கட்டண ரத்து தொடர்பான அரசாணையை விரைவில் வெளியிட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. இந்த விவகாரம் மற்றும் இதனோடு தொடர்புடைய விவகாரங்களில் நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த 02.09.2021 அன்று மக்கள் நீதி மய்யமானது விரிவான அறிக்கை மூலம் வலியுறுத்தியிருந்தது என்பது நினைவுகூரத்தக்கது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment