#Breaking:ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் நீட் குழு – தமிழக அரசு….!

  • நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
  • மேலும்,நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு கட்டாயம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.அந்த வகையில் ,தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த மாதம் பொறுப்பேற்றார்.

இதனையடுத்து,நீட் தேர்வால் தமிழகத்தில் மாணவர்கள் அடைந்துள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய,ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையில் கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்படும் என்று தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் தலைமையில்,மொத்தம் 9 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும்,இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. ஏ.கே. இராஜன் தலைமையில் உயர்நிலைக் குழு அமைத்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆணை பிறப்பித்துள்ளார்.

இந்த அறிவிப்பின்படி ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. ஏ.கே. இராஜன் அவர்கள் தலைமையில்,கீழ்க்காணும் உறுப்பினர்களைக் கொண்ட குழுவானது அமைக்கப்பட்டுள்ளது.அதன்படி,

நீட் குழுவின் தலைவர்,செயலர்:

  • நீதியரசர் திரு. ஏ.கே. இராஜன் (ஓய்வு)- குழுவின் தலைவர்
  • கூடுதல் இயக்குநர். மருத்துவக் கல்வி இயக்ககம் / செயலர். தேர்வுக் குழு – உறுப்பினர்,செயலர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்.

நீட் குழு உறுப்பினர்கள்:

  • டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத்,
  • டாக்டர் ஜவஹர் நேசன்,
  • அரசு முதன்மைச் செயலாளர்,
  • மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை |அரசு முதன்மைச் செயலாளர்,
  • பள்ளிக் கல்வித் துறை,
  • அரசு செயலாளர், சட்டத் துறை,
  • அரசு முதன்மைச் செயலாளர் / சிறப்புப் பணி அலுவலர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்ககம்,உள்ளிட்ட 9 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து,நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.