இரட்டை கோபுர தாக்குதலால் நிறுத்தப்பட்ட தலிபான்களின் பதவியேற்பு விழா

ஆப்கானிஸ்தானின் புதிய அரசாங்கத்தின் பதவியேற்பு விழா இன்று நடைபெறவிருந்த நிலையில் தலிபான்கள் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு பணப் பற்றாக்குறையால் தத்தளித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் பணத்தை சேமிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம்.எனினும், 9/11 தாக்குதலின் 20 வது ஆண்டு இன்று கடைபிடிக்கப்படும் நிலையில்,அதன் நட்பு நாடுகளின் அழுத்தம் காரணமாக புதிய அரசாங்கத்தின் பதவியேற்பு விழா ரத்து செய்யப்பட்டு இருக்கலாம் என்று ரஷியாவின் செய்தி நிறுவனமான டாஸ் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் புதிய அரசாங்கத்தை அமைக்கும் விழாவில் கலந்து கொள்ள சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், துருக்கி, ஈரான் மற்றும் கத்தார் ஆறு நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது.பதவியேற்பு விழாவில் ரஷ்யா எந்த வகையிலும் பங்கேற்காது என்பதை கிரெம்ளின் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் அரசின் கலாச்சார ஆணையத்தின் உறுப்பினர் இனமுல்லா சமங்கனி ட்விட்டரில், “புதிய ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் பதவியேற்பு விழா சில நாட்களுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டது.மக்களை மேலும் குழப்பமடையச் செய்யாமல் இருக்க, இஸ்லாமிய எமிரேட் தலைமை அமைச்சரவையின் பகுதியை அறிவித்தது , அது ஏற்கனவே வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது என்று பதிவிட்டுள்ளார். “

author avatar
Castro Murugan