மக்களுக்கு எதிராக செயல்படுவதை இனியாவது பழனிசாமி அரசு நிறுத்திட வேண்டும் – தினகரன்

மக்களுக்கு எதிராக செயல்படுவதை இனியாவது பழனிசாமி அரசு நிறுத்திட வேண்டும் என்று தினகரன் தெரிவித்துள்ளார். 

தமிழகம் முழுவதும் ஊராட்சி மன்றங்களில்  சாலை மேம்பாட்டு அனுமதி இல்லாமல் அறிவிக்கப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரூ.2,650 கோடி மதிப்பிலான டெண்டர் அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், கிராம சாலைகளை மேம்படுத்துவதாகக் கூறி பழனிசாமி அரசு விதிகளுக்கு மாறாக நடைமுறைப்படுத்த நினைத்த சுமார் 2,650 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்களை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருப்பது பாராட்டுக்குரியது.இதனை ஒரு படிப்பினையாக எடுத்துக்கொண்டு ஊராட்சி மன்றங்களின் மூலமாக கிராம சாலைப் பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.கனிம வளம், உள்ளாட்சி, உயர்கல்வி போன்ற துறைகளிலும் நடந்த பல குளறுபடிகளுக்கு நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஏற்கனவே ஆளாகியிருக்கிறது பழனிசாமி அரசு.

குறிப்பாக அரியர் தேர்வுகளில் பாஸ் ஆனதாக அறிவித்தது, வெளி மாநிலத்தவர் தமிழக அரசின் பணிகளில் அமர்த்தப்பட்டது போன்ற விஷயங்களில் தனது தவறான முடிவுகளுக்காக கடும் கண்டனத்திற்கு இந்த அரசு ஆளானதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு மக்களுக்கு எதிராக செயல்படுவதை இனியாவது பழனிசாமி அரசு நிறுத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

வாக்களித்த திரை பிரபலங்கள்…முதல் ஆளாக வந்த அஜித் குமார்!

Election2024 : நாடாளுமன்றம் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் வாக்கு செலுத்தி வருகிறார்கள். இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் நாடாளுமன்றம்…

7 mins ago

விறுவிறு வாக்குப்பதிவு… காலை 9 மணி வரையில் தமிழக நிலவரம்….

Election2024 : காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7…

30 mins ago

இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்.. ஜனநாயக கடமையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்!

MK Stalin: இந்தியாவுக்கு தான் வெற்றி என்று ஜனநாயக கடமையை ஆற்றிய பிறகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டியளித்தார். நாடு முழுவதும் 21 மாநிலங்களில் நாடாளுமன்றம் மக்களவைத்…

36 mins ago

தொடங்கியது மக்களவை தேர்தல் திருவிழா.. 102 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு.!

Election2024 : 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள மொத்தம் 543 தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தல் இன்று (ஏப்ரல்…

3 hours ago

வெற்றியை தொடருமா சிஎஸ்கே ? லக்னோவுடன் இன்று பலப்பரீட்சை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதுகிறது. நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரின் 34-வது போட்டியாக இன்று லக்னோ…

4 hours ago

இதுனால தான் இவர் லெஜண்ட்! கடைசி நேரத்தில் ரோஹித் சர்மா செய்த மாயாஜால வேலை!

ஐபிஎல் 2024 : கடைசி ஓவரில் ரோஹித் சர்மா செட் செய்த ஃபீல்டால் தான் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது என்று ரசிகர்கள் அவரை கொண்டாடி…

4 hours ago