ஆக்சிஜன் முறையாக விநியோகம் செய்ய உச்சநீதிமன்றம் ஒரு குழு அமைப்பு..!

ஆக்ஸிஜன் கிடைப்பதையும், விநியோகிப்பதையும் திறம்பட எதிா்கொள்ள  தேசிய அளவிலான பணிக் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டனா்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வருகிறது. இதனால், நாடு முழுவதும் பல நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன், படுக்கை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்து வருகிறது.

இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் மருத்துவ ஆக்ஸிஜன் கிடைப்பதையும், விநியோகிப்பதையும் திறம்பட எதிா்கொள்ளும் வகையில் பொது சுகாதார வசதிகளை ஏற்படுத்தித் தர உயா் மருத்துவ நிபுணா்களை உள்ளடக்கிய ஒரு தேசிய அளவிலான பணிக் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டனா்.

கொல்கத்தாவில் உள்ள மேற்கு வங்க மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் பாபாதோஷ் பிஸ்வாஸ் தலைமையிலான இந்த பணிக்குழு  கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் கிடைக்கச் செய்வதையும் உறுதி செய்யும். தேசிய பணிக்குழுவிற்கு, மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan