தற்போதைய காலகட்டத்தில் காதல் திருமணங்களில் தான் அதிக விவாகரத்துகள் நடைபெறுவதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடைபெறும் திருமணங்களின் எண்ணிக்கைக்கு ஈடு கொடுக்கும் விதமாக இருமனம் விரும்பி நடைபெறும் காதல் திருமண எண்ணிக்கையும் பெருகி கொண்டு வருகிறது. ஆனால் அதே வேளையில் முன்பில்லாத அளவில் நீதிமன்றங்களில் விவாகரத்துகளும் தற்போதைய காலகட்டத்தில் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
இன்று உச்சநீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடைபெறுகையில், நீதிபதி பி.ஆர்.காவாய் அடங்கிய அமர்வில் ஒரு வழக்கில், வழக்கறிஞர் இந்த திருமணமானது காதல் திருமணம் என குறிப்பிட்டு பேசியுள்ளார். அப்போது, நீதிபதி கவாய், தற்போது நடைபெறும் விவாகரத்து வழக்குகளில் பெரும்பாலானவை காதல் திருமணங்கள் தான் என குறிப்பிட்டு தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.