#INDvsNZ: போட்டி சமனில் முடிந்ததால் சூப்பர் ஓவர்.!

இந்தியா , நியூசிலாந்து அணிகள் 3-வது டி -20  போட்டி ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் மைதானத்தில் விளையாடியது.இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி இந்திய அணி முதலில் தனது பேட்டிங்கை தொடங்கியது.

முதலில் இறங்கிய  இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 179 ரன்கள். பின்னர் இறங்கிய  நியூசிலாந்து அணி  20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 179 ரன்கள் அடித்தனர். இதனால் போட்டி சமனில் முடிந்தது.இதைத்தொடர்ந்து சூப்பர் ஓவர் நடைபெற்று வருகிறது. சூப்பர் ஓவரை பும்ரா வீசினார்.

நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் ,மார்ட்டின் குப்டில் இருவரும் இறங்கினர். சூப்பர் ஓவர் முடிவில் 17 ரன்கள் அடித்தனர்.அதில் கேன் வில்லியம்சன் 12 ரன்னும்   , மார்ட்டின் குப்டில் 5 ரன்னும் அடித்தனர்.

 

author avatar
murugan