அ.தி.மு.க பிரமுகர் நிலத்தை அபகரித்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாலிபர் தற்கொலை முயற்சி

8

கடலூர் அருகே வெள்ளிமோட்டான் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் என்பவருக்கு  சொந்தமான 2800 சதுர.அடி இடத்தை அ.தி.மு.க முன்னாள் நகரமன்ற துணைத் தலைவர் சேவல்குமார் என்பவர் கிரயம் செய்து விட்டு  பணம் தருவதாக கூறினார்.ஆனால் இதுவரை பணமும் தராமலும்  நிலத்தையும் ஒப்படைக்கமாலும் உள்ளார்.

இந்நிலையில் காவல் துறையினரிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால்  மனமுடைந்த செந்தில்குமார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். செந்தில்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.