சூயஸ் கால்வாய் பிரச்சனை முடிவுக்கு வர இன்னும் 3.5 நாட்கள் ஆகும் மிதக்க தொடங்கிய கப்பல்

சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள எவர் கிவன் கப்பலை மீட்டு முழுமையான போக்குவரத்திற்கு கொண்டு வர இன்னும் 3.5 நாட்கள் ஆகும் என்று எகிப்திய அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர்.

“இந்த சிக்கல் சரிசெய்யப்பட்டவுடன் கால்வாய் 24 மணி நேரமும் செயல்படும்” என்று சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைவர் ஒசாமா ராபி எகிப்திய தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.

400 மீட்டர் நீளமுள்ள (1,300 அடி) எவர் கிவன் கப்பல் ஏறக்குறைய ஒரு வாரமாக சூயஸ் கால்வாய் குறுக்காக முழுவதும் அடைத்து இருக்கிறது.கால்வாயின் கரையிலிருந்து மீட்கப்பட்டு 80% ஆல் சரி செய்யப்பட்டு மிதக்கும் பகுதிக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சூயஸ் கால்வாய் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த  மீட்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கையுடன் கூறியதாவது.எவர் கிவன் உலகின் பரபரப்பான வர்த்தக பாதைகளில் ஒன்றைத் தடுத்து நிற்கிறது.பல நிறுவனங்கள் இந்த செயலை வேகமாக முடிக்க வற்புறுத்துகிறது.இது ஒன்றும் “ஒரு கேக் துண்டு” அல்ல என்று எச்சரித்தார்.

கடந்த ஒருவாரமாக கால்வாயில் சிக்கி இருக்கும் கப்பல் எப்பொழுது மீளும் என்று பல கபாலகள் வரிசையாக டிராபிக் சிக்கனலில் நிற்பதுபோல் நிற்கிறது.இந்த தடையால் பல மில்லியன் டாலர்கள் பொருட்கள் தேக்கம் மற்றும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk