உ.பியில் திறக்கப்படும் பள்ளிகள்-யோகி அரசு அறிவிப்பு

கொரோனா பரவியதன் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச்முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.ஆனால் இன்னும் குறையாமல் கூடிக்கொண்டே தான் கொரோனா செல்கிறதே தவிர குறைந்த பாடில்லை. இந்நிலையில்  ஊரடங்கு முழுமையாக விலக்காத சூழ்நிலையில் பல்வேறு தளர்வுகளுடன் அத்தியாவசிய சேவைகளுக்கு  மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பள்ளிக்கூடங்கள் மூடப்பட்ட போதும் ஆன்லைன் வகுப்புகள் வழியாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர்.

இவ்வாறு இருக்க ஊரடங்கு தளர்வுகளின் அடிப்படையில் உரிய பாதுகாப்பு நடைமுறைகளோடு பள்ளிகளை திறக்க மாநிலங்களுக்கு அனுமதி வழங்கி மத்திய அரசு அறிவுறுத்தியது.அதன்படி ஹரியானாவில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் அம்மாநில அரசின் வழிகாட்டுதல் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்19ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்து உத்தரவிட்டுள்ளது.



author avatar
kavitha