நிலைமை பயமாக இருக்கிறது தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் – சோனு சூட் அறிவுரை..!!

நிலைமை பயமாக இருக்கிறது தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் – சோனு சூட் அறிவுரை..!!

நான் மிகவும் உதவியற்றவனாக உணர்கிறேன் என்று நடிகர் சோனு சூட் ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான பல்வேறு உதவிகளை பாலிவுட் நடிகர் சோனு சூட் செய்தார். அதுமட்டுமல் லாமல், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்வது, விவசாயிகளுக்கு காளைகள் வாங்கித் தருவது,வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப விமான டிக்கெட் எடுத்து கொடுத்து பல உதவிகளை செய்தார்.

கொரோனா 2வது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக மக்கள் விழுப்புணர்வுடன் இருக்க அரசு கேட்டு கொண்டு வருகிறது இந்த நிலையில், நடிகர் சோனு சூட் தனது ட்வீட்டர் பக்கத்தில் ” எல்லாவற்றையும் சொல்லி முடித்தேன், இன்னும் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். யாரையும் குறை சொல்வதற்கான நேரம் இது இல்லை. உங்களால் முடிந்தது உதவியை  தேவைப்படும் ஏழைகளுக்காக முன்வந்து செய்யும் நேரம் இது.

காலையில் இருந்து நான் எனது தொலைபேசியை கீழே வைக்கவில்லை , இந்தியா முழுவதிலும் இருந்து எனக்கு ஆயிரக்கணக்கான அழைப்புகள் வந்து. மருத்துவமனைகளில் படுக்கைகள், மருந்துகள் , ஊசி உள்ளிட்டவை பலருக்கு வழங்க முடியவில்லை, நான் மிகவும் உதவியற்றவனாக உணர்கிறேன். நிலைமை பயமாக இருக்கிறது, தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் , மாஸ்க் அணிந்து, தொற்றுநோயிலிருந்து உங்களைத் தடுக்கவும்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube