தலைநகர் கொரோனா நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது – முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் கொரோனா நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

டெல்லியில் அம்பேத்கர் நகரில் 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை திறந்து வைத்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், டெல்லியில் கொரோனா நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது, மேலும் உயிரிழப்பு குறைந்துவிட்டன என்று தெரிவித்தார்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் பயன்படுத்தப்படும் என்று முதல்வர் கூறினார். மேலும் நிலைமை மீண்டும் மோசமாகிவிட்டால், அதைச் சமாளிக்க அரசாங்கம் முழுமையாக தயாராக உள்ளது என கெஜ்ரிவால் கூறினார்.

டெல்லியில் இன்று ஒரே நாளில் 1,404 பேருக்கு கொரோனா, 23 பேர் உயிரிழப்பு.

டெல்லியில் இன்று ஒரே நாளில் 1,404 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அங்கு மொத்த பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 1,44,127 ஆக அதிகரித்தது.

அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 1,130 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,28,232ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4.098 ஆக அதிகரித்துள்ளது.  தற்போது  10,667 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.