சூர்யாவின் அணுகுமுறை நன்று- வைரமுத்து.!

சூர்யாவின் அணுகுமுறை நன்று- வைரமுத்து.!

கவியரசு வைரமுத்து  தனது ட்வீட்டர் பக்கத்தில் சூர்யாவை பாராட்டி ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

நடிகை மீரா மிதுன் சமீபத்தில் விஜய் மற்றும் சூர்யாவை கடுமையாக விமர்சித்து பேசியதோடு, அவர்களது குடும்பத்தினரையும் அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டிருந்ததார். இதற்கு ரசிகர்கள் மீராவை கடுமையாக விளாசி வந்த நிலையில் நேற்றைய தினம் நடிகர் சூர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில்  தனது ரசிகர்களுக்கு ஒரு பதிவு ஒன்றை பதிவு செய்தார் அதில் "எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் திருமிகு. பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள் என கூறியிருந்தார்.

சூர்யா கூறிய இந்த கருத்துக்காக பலதரப்பில் இருந்து அவருக்கு பாராட்டு வந்தது, இந்நிலையில் அந்த வகையில் தற்பொழுது கவியரசு வைரமுத்து  தனது ட்வீட்டர் பக்கத்தில் சூர்யாவை பாராட்டி ட்வீட் ஒன்றை செய்துள்ளார், அதில் வைரமுத்து கூறியது "சுமத்தப்பட்ட பழியின்மீது சூர்யாவின் அணுகுமுறை நன்று பக்குவப்பட்டவர்கள் பதற்ற முறுவதில்லை பாராட்டுகிறேன், நதியோடு போகும் நுரையோடு கரை கைகலப்பதில்லை, என்று பதிவு செய்துள்ளார்.

Latest Posts

பாபர் மசூதி இடிப்பு வழக்கு... மத்திய புலானாய்வுத்துறை படுதோல்வி அடைந்திருப்பது மகாக் கேவலமாகும்.....
தமிழகத்தில் இன்று கொரோனாவில் இருந்து 5,610 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.!
கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக 8,830 பேருக்கு கொரோனா.!
இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் மறைவு.... திமுக தலைவர் இரங்கல்...
ராம கோபாலன் மறைவெய்திய செய்தியால் மிகுந்த வருத்தமுற்றேன் - மு.க. ஸ்டாலின்
#IPL2020 : டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடிவு
#BREAKING: அடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.. திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி..!
டெல்லியில் இன்று 3,965 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.!
இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் மறைவு - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இரங்கல்
சென்னையில் இன்று ஒரே நாளில் 1295 பேருக்கு கொரோனா..!