கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இன்னும் முடியவில்லை – மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர்

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இன்னும் முடியவில்லை என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லால் அகர்வால் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த  கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அந்த வகையில், தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில்,கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.

இந்நிலையில், இன்று கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் அவர்கள், டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது கேரளா, மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 44 மாவட்டங்களில் கொரோனா வீதம் 10 சதவீதத்திற்கு மேல் உள்ளது என்றும், 222 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் கேரள மாநிலத்தில் 10 மாவட்டங்கள் உட்பட மொத்தம் 18 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும், இந்த 18 மாவட்டங்களில் மட்டும் 47.5 சதவீத கொரோனா பாதிப்புகள் பதிவாகின்றன என்றும் தெரிவித்துள்ளார். மேலும் உலகம் முழுவதும் தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் இந்தியாவை பொருத்தவரை கொரோனா வைரஸ் இரண்டாவது அலை இன்னும் முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.