வருகின்ற தீபாவளிக்கு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் விஜய்யின் நடிப்பில் தளபதி 63-வது படம் வெளியாக உள்ளது.

தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் உடன் இணைந்து அட்லி இயக்கிவரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு விஜயின் பிறந்த நாள் அன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படத்தின் போட்டோக்களும் வீடியோக்களும் ஆரம்பத்திலிருந்தே வெளியே கசிந்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில் EVP பிலிம் போடப்பட்டுள்ள பிரம்மாண்டமான செட்டில் பயிற்சியாளர் போல தோற்றமளிக்கும் வெளிநாட்டவர் ஒருவர் கால்பந்தை சுழற்றி நடத்திய சாகசத்தை படத்தில் நடிக்கும் ஜுனியர் ஆர்டிஸ்ட்டுகள் கசியவிட்டுள்ளனர்.