திருவெறும்பூரில் இரண்டாவது நாளாக வெறிச்சோடிய டாஸ்மாக்.!

திருவெறும்பூர் பகுதியில் பெரும்பாலானோர் தினக்கூலி என்பதால் மக்களிடம் பணம் இல்லாததால் மது வாங்க வரவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.  ஊரடங்கு அமலில் இருந்ததால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது.  40 நாள்களுக்கு பிறகு டெல்லி, கர்நாடகா போன்ற மாநிலங்களில் டாஸ்மார்க் கடைகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று தமிழகத்தில் 3500-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் 43 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டன.

மேலும், மது பிரியர்கள் தனிமனித இடைவெளியை  கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்பட்டது.  சில மாவட்டங்களில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க கூடை உடன் வருபவர்களுக்கு மட்டுமே மதுபானம் என்றும், சில மாவட்டங்களில் ஆதார் அட்டை கண்டிப்பாக கொண்டு வரவேண்டும் என தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று மட்டும் 170 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றதாக டாஸ்மாக் நிர்வாகத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி அருகே உள்ள திருவெறும்பூரில் இயங்கும் ஒரு டாஸ்மாக் கடையில் இரண்டாவது நாட்களாக என்றும் ஆட்கள் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது.

திருவெறும்பூர் பகுதியில் பெரும்பாலானோர் தினக்கூலி என்பதால் மக்களிடம் பணம் இல்லாததால் மது வாங்க வரவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk