#Breaking:பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவி – பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு!

#Breaking:பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவி – பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு!

பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு ரூ.75,000 நிதியுதவி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

நிரந்தர முடக்கம் அடைந்த பெற்றோர்,விபத்தில் இறந்த தாய் அல்லது தந்தை உள்ளிட்ட பெற்றோரை இழந்த பள்ளி மாணவ,மாணவிகளின் கல்வி பராமரிப்பு செலவுகளுக்கு ரூ.75,000 நிதியுதவி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேலும்,இந்த உதவித்தொகையப் பெற மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. குறிப்பாக,இத்திட்டத்தில் பயனடையும் மாணவ – மாணவியர் தற்போது வேறு பள்ளியில் சேர்க்கப்பட்டு கல்வி பயின்றால், தற்போது பயிலும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் அதற்கான படிவத்தை பெற்றும் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube