எனக்கு ஏற்பட்ட நிலை உங்களுக்கும் ஏற்படலாம் - எம்எல்ஏ செல்வம்

எனக்கு ஏற்பட்ட நிலை உங்களுக்கும் ஏற்படலாம் - எம்எல்ஏ செல்வம்

  • bjp |
  • Edited by venu |
  • 2020-08-05 16:48:16
எனக்கு ஏற்பட்ட நிலை உங்களுக்கும் ஏற்படலாம் என்று எம்எல்ஏ கு.க.செல்வம் தெரிவித்துள்ளார். 

டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்தார் திமுகவை சேர்ந்த கு.க. செல்வம்.இதன் பின்னர் எம்எல்ஏ கு.க. செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில், என்னுடைய தொகுதி விவகாரங்களை குறித்து தான் ஜே.பி.நட்டா அவர்களை சந்தித்தேன். திமுகவில் உட்கட்சி தேர்தலை ஸ்டாலின் முறையாக நடத்த வேண்டும். தமிழ் கடவுள் முருகனை தவறாக பேசியவர்களை மு..க. ஸ்டாலின் கண்டிக்க வேண்டும். நான் - பிஜேபியில் இணையவில்லை.தொகுதி மேம்பாட்டுக்காக மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்திக்க  வந்தேன். நட்டாவை சந்தித்தத்தற்காக என்மீது நடவடிக்கை எடுத்தால் எடுக்கட்டும் என்று தெரிவித்தார்.

இதன் பின் ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ.  கு.க.செல்வம் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக  திமுக தலைமை  அறிவிப்பு வெளியிட்டது டெல்லியில் இருந்து சென்னை வந்த திமுக எம்எல்ஏ  கு.க.செல்வம் தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்தில் ராமர் படத்திற்கு மரியாதை செலுத்தினார்.பின்னர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், டெல்லியில் சென்றதற்கு வந்ததற்கு என்னை கட்சியை விட்டு நீக்கினாலும் பரவாயில்லை என்று கூறினேன்.இன்று தற்காலிமாக நீக்கப்பட்டுள்ளேன்.என்னை கட்சியை விட்டு  நீக்கினாலும் பரவாயில்லை.தமிழகத்தில் வாரிசு அரசியல் மாறி குடும்ப அரசியல் நடக்கிறது. திமுகவில் 55வயதிற்கு மேற்பட்டவர்கள் கட்சியில் இருக்காதீர்கள். எனக்கு ஏற்பட்ட நிலை உங்களுக்கும் ஏற்படலாம் .அதனால் எல்லோரும் பாஜகவில் வந்து சேருங்கள் என்று தெரிவித்துள்ளார்

]]>

Latest Posts

உலகளவில் கொரோனா பாதிப்பு 3.09 கோடியாக உயர்வு.!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 92,605 பேருக்கு கொரோனா, 1,133 பேர் உயிரிழப்பு.!
#IPL2020: இன்றைய போட்டி.. டெல்லி – பஞ்சாப் அணிகள் மோதல்! வெற்றிபெறப்போவது யார்?
5,90,000 நாட்டிக்கல் மைல்கள் பயணம் செய்துள்ள ஐஎன்எஸ் விராட் விடைபெற்றது...
#CSK-பவுலர்களுக்குப் பாராட்டு..!இதைச் செய்யத் தவறினோம்..ரோகித்!
#IPL2020:ரசிகர்கள் இல்லாத மைதானம்! CSKபயிற்சியாளர் ஒபன்டாக்!
ஆன்லைன் வகுப்பு கற்க செல்போன் வாங்க பணமில்லாததால் சாக்கடை அள்ளிய மாணவிக்கு லேப்டாப் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்!
#IPL2020 இன்று மோதும் டெல்லி-பஞ்சாப்!!பாதகம்..சாதகம் ஒரு பார்வை !
#தீவிரவாதிகளின் சொத்துக்கள் முடக்கம்! NIA அதிரடி!
கீழடி 6ஆம் கட்ட அகழாய்வில் புதிய 6 உறைகொண்ட உறைகிணறு கண்டுபிடிப்பு...