செங்கல்பட்டில் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் பெயர்ந்து விழுந்த மேற்கூரை…!

செங்கல்பட்டில் குழந்தைகள் வார்டில் பெயர்ந்து விழுந்த மேற்கூரை. 

செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் தாய், சேய் குழந்தைகள் சிறப்பு வார்டில், 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதுகாக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வார்டில் திடீரென்று மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இது ஒரு தாயும் குழந்தையும் படுத்திருந்த படுக்கையின் மீது விழுந்துள்ளது. ஆனால் யாருக்கும் சேதம் ஏற்படவில்லை.

உடனடியாக குழந்தையை அங்கிருந்து எடுத்துக்கொண்டு, அடுத்த வார்டுக்கு பாதுகாப்பாக சென்று விட்டனர். மேற்கூரை முழுவதும் சேதம் அடைந்த நிலையில் அதை பூசி சரிசெய்யாமல், தெர்மாகோலை வைத்து மறைத்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து , எந்த பெற்றோரும் அந்த வார்டில் இருக்க முன்வரவில்லை. மேலும், இது தொடர்பாக மருத்துவமனை முதல்வர் கூறுகையில்,  பொதுப்பணித்துறை அதிகாரிகளைக் கொண்டு விரைவில் மேற்கூரை சரி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.