roofcollapsed

கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழப்பு..! 8 பேர் காயம்..!

By

உத்தரப்பிரதேசத்தில் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் உள்ள மாவாய் கிராமத்தில் கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டுவந்த கட்டிடத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இந்த இடிபாடுகளில் 4 பேர் உயிரிழந்துள்ளார் மற்றும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

இதன்பின் தகவல் அறிந்து வந்த மீட்புத் துறையினர் இறந்தவர்களின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளை அகற்றவும், உடல்களை மீட்கவும் தொடர்ந்து பணி நடந்து வருகிறது.

மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழந்த நால்வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், சம்பவம் நடந்த போது அவர்கள் வீட்டின் கீழ் தளத்தில் தூங்கிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.