இந்தியா, பாகிஸ்தானு-கிடையே உறவு மிக மோசமடைந்துள்ளது….டொனால்டு டிரம்ப் கருத்து…!!

  • காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
  • இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக் -கிடையேயான உறவு மிக மோசமடைந்துள்ளது என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூர தாக்குதலில்  44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா_வில் உள்ள வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசுகையில் தற்சமயம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக் -கிடையேயான உறவு மிக மோசமடைந்துள்ளது. அங்கே மிகவும் ஆபத்தான சூழல் உருவாகின்றது.இந்த பகைமை உணர்வுக்கான சூழல் நிற்க வேண்டும்.  என்று நாங்கள் இரு தரப்பிடமும் நாங்கள் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment