நடிகை நயன்தாரா பெயர் வர காரணம்!யார் இந்த பெயரை வைத்தார் தெரியுமா?

சினிமா உலகில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய மொழிகளில் நம்பர் ஒன் நடிகையாக வலம்வருபவர் நடிகை நயன்தாரா ஆவார்.தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமான இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
இவர் சொந்த பெயர் டயானா மரியம் குரியன் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.இவருக்கு நயன்தாரா என்று எவ்வாறு பெயர் வைத்தார்கள் என்று அதை வைத்தவரே கூறியுள்ளார்.
மலையாளத்தில் நயன்தாரா அறிமுகமான முதல் படம் மனசினக்கரே.இந்த படத்தை இயக்குனர் சத்தியன் இயக்க ஜெயராம்,செம்மீன் ஷீலா ஆகியோர் நடித்திருந்தனர்.
நயன்தாராவிற்கு பெயரை சூட்ட இயக்குனர் சத்யன் படக்குழுவினரிடம் கலந்து விவாதித்து வந்தனர்.ஒரு வழியாக நடிகை ஷீலா தான் நயன்தாராவிற்கு இந்த பெயரை சூட்டினாராம்.
தாரா என்றால் நட்சத்திரம் என்று பொருள்.சினிமா உலகில் பிரபல நட்சத்திரமாக உலா வரவேண்டும் என்பதற்காக நயன்தாரா என்ற பெயரை சூட்டினாராம்.