நாட்டை கொள்ளையடிப்பது தான் தெளிவான நோக்கம் - EIA2020 குறித்து ராகுல் காந்தி கருத்து

நாட்டை கொள்ளையடிப்பது தான் தெளிவான நோக்கம் - EIA2020 குறித்து ராகுல் காந்தி கருத்து

நாட்டை கொள்ளையடிப்பது தான் தெளிவான நோக்கம்  என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது, "சூழலியல் தாக்க மதிப்பீடு 2006" நடைமுறையில் உள்ளது.இதற்கிடையில்  புதிய மாறுதல்களுடன் கூடிய புதிய வரைவு கடந்த மார்ச் மாதம் 12 -ஆம் தேதி மத்திய அரசு "சூழலியல் தாக்க மதிப்பீடு 2020" என்ற பெயரில் வெளியிட்டது.அந்த வரையறையின் படி "சூழலியல் தாக்க மதிப்பீடு 2020" அனுமதி வழங்கப்பட்டால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதுகாப்பும் இருக்காது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இது குறித்து பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள பதிவில்,நாட்டை கொள்ளையடிப்பது தான் "சூழலியல் தாக்க மதிப்பீடு 2020" வரைவின் தெளிவான நோக்கம். நாட்டின் வளங்களை கொள்ளையடிக்கும் மோடியின் சூட் பூட் நண்பர்களுக்காக மட்டுமே பாஜக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணம் இது. சுற்றுச்சூழல் அழிவு & வளங்கள் திருட்டை தடுக்க "சூழலியல் தாக்க மதிப்பீடு 2020" -ஐ திரும்பப் பெற  வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Latest Posts

பாலு நினைவிலே என்றும் இருப்பேன்... பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் இரங்கல்...
நியாய விலைக் கடைகளில் போலிப் பட்டியல் மட்டுமின்றி அதிக இருப்பு வைத்தாலும் குற்றமே... பதிவாளர் சுற்றறிக்கை...
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் டிராகன் மீது நான் சார்ந்திருப்பதை முடிப்பேன்.. டிரம்ப்
ராணுவ விமான விபத்து... 25 பேர் பலி... சோகத்தில் ஆழ்த்திய கோரம்...
7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த கொல்கத்தா..!
"இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ரெய்னாவை எதிர்பார்க்க முடியாது!"- சென்னை அணியின் சி.இ.ஓ. அதிரடி!!
கொல்கத்தா அணிக்கு 143 ரன்கள் நிர்ணயித்த ஐதராபாத்..!
28-ம் தேதி பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியாகும்..?
#IPL2020 : டாஸ் வென்ற ஹைதராபாத் அணி  பேட்டிங் தேர்வு ! இரண்டு அணியிலும் அதிரடி மாற்றம்
மும்பையில் 3 தன்னார்வலர்களுக்கு கோவிஷீல்ட் 1 வது டோஸ் வழங்கப்படுகிறது!