இன்று முதல் ஜன.31 ஆம் தேதி வரை தடை – அதிரடி உத்தரவு!

செங்கல்பட்டு:வண்டலூர் பூங்கா ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து,முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வண்டலூர் உயிரியல் பூங்காவில் இன்று முதல் 31 ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இதனால்,தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்,ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்,வண்டலூர் உயிரியல் பூங்காவில், பூங்கா ஊழியர்கள் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,வண்டலூர் உயிரியல் பூங்காவில் இன்று (ஜன.17) முதல் 31 ஆம் தேதி வரை மூடப்படுகிறது என்றும், இந்நாளில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும்,ஜன.31-ம் தேதியன்று நிலைமையை பகுப்பாய்வு செய்து எப்போது பூங்கா திறப்பது என்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.