கொரோனா பாதிப்புடன் கூட்டத்தில் கலந்து கொண்ட பாகிஸ்தான் பிரதமர்….!

கொரோனா பாதிப்புடன் கூட்டத்தில் கலந்து கொண்ட பாகிஸ்தான் பிரதமர்….!

கொரோன தோற்றால் பாதிக்கப்பட்டு, தனிமையில் இருக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஊடக குழுவினருடன் நேற்று முன்தினம்  அவரது வீட்டில் ஆலோசனை கூட்டத்தை தலைமை ஏற்று நடத்தியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமரின் இம்ரான் கானுக்கு, கடந்த 20-ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவருக்கு தொற்று உறுதி செய்யப்படுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்புதான் தடுப்பூசி போடப்பட்டிருந்தது. இவரைத் தொடர்ந்து, இவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இருவரும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில், கொரோன தோற்றால் பாதிக்கப்பட்டு, தனிமையில் இருக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஊடக குழுவினருடன் நேற்று முன்தினம்  அவரது வீட்டில் ஆலோசனை கூட்டத்தை தலைமை ஏற்று நடத்தியுள்ளார். இந்த கூட்டத்தில் இம்ரான்கான் ஒரு இருக்கையிலும், அவருக்கு அருகே ஊடக குழுவினர் வேறு இரு இருக்கைகளிலும் அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியானது.

இதனையடுத்து, பாகிஸ்தான் பிரதமரின் இந்த செயலுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தானை பொறுத்தவரையில் கொரோனா வைரஸ் பாதித்த ஒருவர் 9 முதல் 14 நாட்களுக்கு தனிமையில் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube