நெட்வொர்க் கிடைக்காததால் மலையில் குடில் அமைத்து படித்த மாணவிக்கு இணையவசதி வழங்க முடிவு .!

நெட்வொர்க் கிடைக்காததால் மலையில் குடில் அமைத்து படித்த மாணவிக்கு பிரதமர் சிறுமியின் வீட்டில் இணையவசதி வழங்க உள்ளதாக தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ள சிந்துதுர்க் பகுதியை சேர்ந்தவர் ஸ்வப்னாலி. இவர் கோபிநாத் கல்லூரியில் படித்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஸ்வப்னாலி வசிக்கும் இடத்தில் செல்போன் நெட்வொர்க் இல்லாத காரணத்தால் அவர் அருகிலுள்ள மலையில் செல்போன் சிக்னல் கிடைக்கும் இடத்தில் குடில் அமைத்து காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை படித்து வருகிறாராம்.

சமீபத்தில் இந்த தகவலை மாணவியின் புகைப்படத்துடன் வனத்துறை அதிகாரியான தேவ் பிரகாஷ் மீனா பகிர, அவை சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதனை கண்ட பிரதமர் மாணவியின் வீட்டிற்கு இணையவசதி செய்து தருவதாக கூறி உத்தவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், பாரத் நெட்வொர்க் அதிகாரிகள் மாணவியின் வீட்டில் இணையவசதி செய்து கொடுப்பதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.