ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு.!

சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 128 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகம்

By balakaliyamoorthy | Published: May 23, 2020 03:04 PM

சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 128 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் ஊரடங்கில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்ட பின்னர் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.128 உயர்த்தப்பட்டுள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,544க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று இதன் விலை 4,528 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 உயர்ந்துள்ளது. 

அதேபோல, நேற்று 36,224 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 128 ரூபாய் உயர்ந்து, 36,352 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் இன்று சிறிதளவு உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ.51.40 ஆக இருந்தது. ஆனால், இன்று அதன் விலை ரூ.52.10 ஆக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.52,100 விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Step2: Place in ads Display sections

unicc