ஆவின் பால்பொருள்களின் விலை மாற்றப்படும்- அமைச்சர் நாசர் அறிவிப்பு..!

ஆவின் பால்பொருள்களின் விலை மாற்றப்படும்- அமைச்சர் நாசர் அறிவிப்பு..!

சேலம் கூட்டுறவு பால் பண்ணையில் இனிப்பு இல்லதாக பால்கோவா தயாரிக்கும் அலகு ரூ.8 கோடியில் நிறுவப்படும் என அமைச்சர் நாசர் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று 6-வது நாளாக நடைபெற்று வருகிறது. இன்றை தினம் கால்நடை, வேளாண் மற்றும் மீன்வள ஆகிய துறைகளின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, பால்பொருட்களின் விலை மாற்றப்படும்.

சேலம் கூட்டுறவு பால் பண்ணையில் இனிப்பு இல்லதாக பால்கோவா தயாரிக்கும் அலகு ரூ.8 கோடியில் நிறுவப்படும். பண்ணையில் தினமும் இரண்டு மெட்ரிக் டன் அளவில் இனிப்பில்லாத பால்கோவா தயாரிக்க ஏற்பாடு செய்யப்படும். மேலும், தஞ்சையில் ரூ.25 கோடியில் 100 மெட்ரிக் டன் கால்நடை தீவன அறுபத்தி செய்யும் ஆலை தொடங்கப்படும் என கூறியுள்ளார்.

ஒற்றை சாளர முறையில் ஆவின் முகவர் நியமிக்கப்படுவர். பாலகங்களில் விற்கும் பால் பொருள்களுக்கு ரசீது தரப்படும். பால் பவுடர், வெண்ணெய் மொத்த விற்பனை முறையில் சீர்திருத்தம் செய்யப்படும். இதர நிறுவனங்களின் விலையோடு ஒப்பிட்டு ஆவின் பால்பொருள்களின் விலை மாற்றப்படும் என தெரிவித்தார்.

author avatar
murugan
Join our channel google news Youtube