, ,

காதலித்த பெண் காவலரை திருமணம் செய்ய மறுத்த காவலர்..! தாலி கட்ட வைத்த பெண் காவலர்..!

By

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அடுத்து பாண்டுரங்கன் தொட்டியை சார்ந்தவர் கண்ணன்.இவர் மோப்பநாய் பிரிவில் வேலை செய்து வருகிறார்.இவரது உறவினர் பெண் நதியா.இவர் திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை காவலராக வேலை செய்து வருகிறார்.
நதியா ,கண்ணன் இருவரும் கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்து உள்ளனர்.இந்நிலையில் நதியவை கண்ணன் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதனால் தான் ஏமாந்து விட்டதாக கூறி நதியா விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்து உள்ளார்.
நதியாவை  மீட்ட அவரது உறவினர்கள் தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.தகவல் அறிந்த தேன்கனிகோட்டை டிஎஸ்பி சங்கீதா விசாரணை மேற்கொண்டதை தொடர்ந்து கண்ணன் நதியாவை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.
இதை தொடர்ந்து இருவரும் தேன்கனிகோட்டை நரசிம்ம சுவாமி கோவிலில் காவலர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

Dinasuvadu Media @2023