காவல்துறையினரால் ஆரமிக்கப்பட்ட பிரச்சனைக்கு காவல்துறையினரே ஆதரவு.!

அமெரிக்காவில் மின்னபோலிஸ் நகரில் காவல் அதிகாரி ஒருவர் கருப்பினத்தை சேர்ந்த

By gowtham | Published: Jun 02, 2020 08:40 AM

அமெரிக்காவில் மின்னபோலிஸ் நகரில் காவல் அதிகாரி ஒருவர் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ச் பிளாயீடு என்பவரின் கழுத்தில் முட்டியை வைத்து அழுத்தியதால், அவர் உயிரிழந்தார். இதனை கண்டித்து, கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெள்ளைமாளிகை முன்பு நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் அமெரிக்காவில் விடிய விடிய வன்முறை போராட்டங்கள் நடந்து வருகிறது. வெள்ளை மாளிகை அருகில் போராட்டம் தீவிரமடைந்து  கார்கள், பொதுச்சொத்துக்கள் தீ வைக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க போராட்டங்கள் லண்டனுக்கும் பரவியது. இதில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முயற்சித்தனர்.

அமெரிக்காவில் நிறவெறியையும், காவல்துறையினரின் அராஜகத்தையும் கண்டித்து நடக்கும் போராட்டங்களில் ஆங்காங்கே காவல்துறையினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் ஒரு சில வீடியோ புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

 

 

Step2: Place in ads Display sections

unicc