சீனாவின் தென்மேற்கு பகுதியான குய்சோ மாகாணத்தில் வசித்து வருபவர்  சூ லியாங்.இவர் “பான்டன்” என்று  பெயரிடபட்ட  நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். லியாங்  மகள் பள்ளி படங்களை சரியாக செய்கிறாரா? என்பதை கவனிப்பது தான் “பான்டன்”உடைய வேலை.

லியாங் மகள் பள்ளிப்பாடங்களை ஒழுங்கா செய்யாமல் அதிக நேரம் செல்போனில் நேரத்தை செலவிடுவதால். தன் மகள் பள்ளிப்பாடங்களை ஒழுங்காக செய்வதை   கண்காணிப்பதற்காக  “பான்டன்”க்கு பயிற்சி கொடுக்க முடிவு செய்தார்.

அதன்படி லியாங் மகள் பள்ளி பாடம் செய்யும் போது,அவரின் டேபிள் மேல் கால்களை வைத்து நின்றபடி பான்டன் கண்காணித்து வருகிறது .

மேலும் பள்ளி பாடம் செய்யும் போது மட்டுமல்லாமல், பியானோ வாசிக்கும்போது அவரின் கவனம் வேறு செல்லாமலும் பான்டன் ஆசிரியர் போல கண்காணித்து வருகிறது.