உள்ளாடையுடன் கடைக்கு சென்று எதிர்ப்பு தெரிவித்த நபர்..!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இங்கிலாந்தில் அத்தியாவசியமற்ற ஆடைகள் மற்றும் புத்தகங்கள் போன்ற பொருட்களை விற்பனை செய்ய அரசாங்கம் தடை விதித்துள்ளது. இந்த தடையை எதிர்த்து ஒரு நபர் சூப்பர் மார்க்கெட்டிற்கு உடைகள் அணியாமல் உள்ளாடை மட்டுமே அணிந்து கொண்டு முகத்திற்கு முகக்கவசத்தை மட்டுமே அணிந்து கொண்டு செல்கிறார்.

அவருடன் அவரது மனைவியும் கடைக்குச்செல்கிறார். உடைகள் அணியாமல் வந்த நபரை பார்த்த அந்த சூப்பர் மார்க்கெட் கடை ஊழியர் ஒருவர் தடுத்து நிறுத்துகிறார். அப்போது, அவரது மனைவி ஊழியரிடம், “உடைகள் அத்தியாவசியமற்றவை” உள்ளே விடுங்கள்” என்று கூறினார். அதற்கு அந்த ஊழியர் உடைகள் அவசியம் என்று சொல்லி அவர்களை அங்கிருந்து வெளியேறினார்.

இந்த உத்தரவால் நாட்டின் பல சூப்பர் மார்க்கெட்களில் உள்ள குழந்தைகளின் உடைகள், படுக்கை உள்ளிட்ட பொருட்களை வாங்குவதைத் தடுக்கின்றன. தடையை மாற்றியமைக்கக் கோரும் மனுவில் சுமார் 64,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

author avatar
murugan