,
Rajinikanth lookalike performance

சும்மா கிழி…அச்சு அசலாக ரஜினியை போல இருக்கும் நபர்…அசந்து போன ரசிகர்கள்…வைரலாகும் வீடியோ.!!

By

நடிகர் ரஜினிகாந்திற்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். தமிழ்நாட்டையும் தாண்டி அவருக்கு பல நாடுகளிலும் ரசிகர்கள் இறக்கிறார்கள். எனவே, ரஜினியின் தீவிர ரசிகர்கள் அடிக்கடி அவருடைய கெட்டப்களை போட்டுகொண்டு அவரை போலவே நடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாவது வழக்கமான ஒன்று.

அந்த வகையில், மலேஷியாவில் உள்ள ஒரு ஹோட்டல் ஒன்றில், தர்பார் படத்தில் ரஜினி போலீஸ் வேடத்தில் நடித்திருந்த கெட்டப்பை போட்டுகொண்டு ரசிகர் ஒருவர் ரஜினியை போலவே நடிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோவில் ” அந்த நபர் அச்சு அசலாக ரஜினியை போலவே கெட்டப் போட்டுகொண்டு சும்மா கிழி பாடலுக்கு நடனம் ஆடுகிறார். பிறகு அங்கு சாப்பிட வந்தவர்களுக்கு கையை கொடுத்து அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொள்கிறார்.

ரஜினி கெட்டப் போட்டுக்கொண்டிருக்கும் அந்த நபரை பார்த்த அங்கிருந்த சிலர் ஒரு நிமிடம் ரஜினி தானா இது..? என சற்று ஷாக்குடன் பார்த்தார்கள். மேலும் நடிகர், ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.